புளொட் மாவையை முதலமைச்சர்ராக்குமாம்!

வடக்கு மாகாண சபைக்­கான தேர்­த­லில் மாவை சேனா­தி­ரா­சாவை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றக்க முடி­வெ­டுக்­கப் பட்­டால் அதற்கு புளொட் முழு ஆத­ர­வை­யும் வழங்­கும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக்­ கட்­சி­க­ளுள் ஒன்­றான புளொட்­டின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான த.சித்­தார்த்­தன் தெரி­வித்­தார்.

முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக்கு யார் பொருத்­த­மா­ன­வர் என்று கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் மூன்று கட்­சி­க­ளும் கூடி ஆராய்ந்து முடி­வெ­டுக்­கும் சந்­தர்ப்­பத்­தில், மாவை சோனா­தி­ரா­சாவை வேட்­பா­ள­ரா­கக் கூட்­ட­மைப்பு முன்­னி­லைப்­ப­டுத்­தி­னால் அதற்கு முழு ஆத­ர­வைப் புளொட் கட்சி வழங்­கும். இன்­றைய அர­சி­யல் சூழ்­நி­லை­யில் கூட்­ட­மைப்­புக்­குள் எந்­தப் பிள­வும் ஏற்­ப­டக்­கூ­டாது. பிளவு ஏற்­ப­டு­மா­யின் அது தமிழ் மக்­க­ளுக்­குப் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்.

பிறி­தொரு கட்­சி­யில் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­டு­வா­ரா­யின் அது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குப் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தும். எனவே, மக்­க­ளின் நன்மை கருதி அனை­வ­ரும் தங்­க­ளது சுய­ந­லத்­தைப் புறந்­தள்ளி ஒற்­று­மை­யா­கச் செயற்­பட வேண்­டும்.

வடக்கு, கிழக்­கில் நிகழ்த்­தப்­ப­டும் பௌத்­த­ம­ய­மாக்­க­லைத் தடுப்­ப­தற்கு மீண்­டும் ஆயு­தம் ஏந்த வேண்­டும். ஆனால் , இன்­றைய தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­தம் ஏந்­து­வ­தற்­குத் தயார் இல்லை. 70 வருட இனப்­பி­ரச்­சி­னையை ஒரு குறிப்­பிட்ட கால எல்­லைக்­குள் தீர்த்து வைக்க முடி­யாது. எனவே, இன்றை கூட்­டாட்­சி­யி­லும் தமி­ழர்­க­ளுக்­குத் தீர்வு கிட்­டுமா என்­பது சந்­தே­கம் ­தான் என்­றார்.
Powered by Blogger.