ரஜினி மீது போலீஸில் புகார்!

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி சென்றபோது, ரஜினி பேசிய பேச்சினை ‘கொலை மிரட்டலாக’ கருதி, வழக்குப் பதிவு செய்யுமாறு ஓசூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


ஓசூரின், சென்னத்தூர் பகுதியைச் சேர்ந்த மனுதாரர் சிலம்பரசன், ஓசூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள மனுவில், “பொய்யான கருத்தை பரப்பி போராடினால் உயிர்பலி ஆகிவிடும் என எதிர்மறையாக தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் கொலை மிரட்டல் விடுத்து எச்சரிக்கை செய்து, மேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடி, துப்பாக்குச் சூட்டுக்கு பலியான 13 பேர்களை சமூக விரோதிகள் என மறைமுகமாக பேசும் வகையில் கொச்சைப்படுத்தி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும், தியாகங்களையும், போராட்டங்களையும், அவமதிக்கும் வகையில் பேசி போராட்டத்திற்கு சமூக விரோதிகளே காரணம். போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் எனக் கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய மனுதாரர் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கொடுத்த புகாரின் பேரில் மனு” என்று குறிப்பிட்டிருப்பதாக காவல் நிலைய மனு ரசீது கொடுக்கப்பட்டிருக்கிறது.
Powered by Blogger.