நன்றாக மார்பிங் செய்கிறார்கள் : சிம்ரன்!

என் புகைப்படங்களை வைத்து, என்னைப் பற்றி வதந்திகள் கிளப்புகிறார்கள் என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.


தமிழ்த் திரையுலகின் கனவுக்கன்னியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அதன் பிறகு திருமணம், குழந்தை என சிலகாலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

காலாவிற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படத்தில், சிம்ரன்தான் ரஜினிக்கு ஜோடி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் குறித்து ஒரு வதந்தி பரவ தொடங்கி இருக்கிறது.

அதாவது,நாளைமுதல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் யார் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என இணையதளத்தில் ஒரு பட்டியல் உலா வருகிறது. இதில் சிம்ரனின் பெயரும் இருக்கிறது. இதேபோல் ராய் லக்‌ஷ்மி பெயரும் இருந்தது. அதற்கு அவர் சம்மந்தப்பட்ட தொலைக்காட்சியைக் கடுமையாக சாடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதேபோல் இப்போது சிம்ரனும் அதற்குப் பதில் கூறியுள்ளார்.

“பிக் பாஸில் நான் கலந்து கொள்ளப்போவதாக, இணையத்தில் உலா வரும் படங்களை பார்க்கும் போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

என் போட்டோவை நன்றாக மார்பிங் செய்து இணையத்தில் வரும் பிக் பாஸ் செய்திகளில் போட்டிருக்கிறார்கள்” என சிம்ரன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
Powered by Blogger.