சர்வதேச குற்றவாளிகளுடன் மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு!

போதைப்பொருள் வர்த்தத்துடன் தொடர்புடைய கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

மூவாயிரத்திற்கும் அதிகமான தொலைபேசி உரையாடல் தொடர்பில் இவ்வாறு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவற்றில் இந்தியா, துபாய், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுடன், கைதிகள் தொடர்புகளை பேணிவருகின்றமை ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

காலி, வெலிக்கடை மற்றும் மகசின் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளே இவ்வாறு சர்வதேச நாடுகளிலுள்ள குற்றவாளிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தற்போது விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாகவும் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேவளை, கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட உபகரணங்களை சிறைச்சாலை காவலர்கள் வழங்கியமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

6 சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.