யாழில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு- மக்கள் வங்கியில் கடன்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுயதொழில் மேற்கொள்கின்ற சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடனுதவித் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கியில் இன்று நடைபெற்றது.

தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க இந்த கடனுதவித் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காசோலைகளையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான மங்கள சமரவீர,அகிலாவிராஜ் காரியவசம், இராஜங்க அமைச்சர்கள் மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள், கடனுதவிபெறுபவர்கள் கலந்து கொண்டனர்.

Powered by Blogger.