சர்வதேசமும், நல்லாட்சியும் கைவிட்டுவிட்டது!-கேப்பாப்பிலவு மக்கள்!

சர்வதேசமும், நல்லாட்சியும் எமக்கு உரிய தீர்வை முன்வைக்க தவறியுள்ள நிலையில், தமது பிரச்சினைக்கான தீர்வை தாமே தேடிக் கொண்டிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.


தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டம் இன்றுடன் (சனிக்கிழமை) 500 நாட்களை எட்டியுள்ளது.

இந்நிலையில், எமது பூர்வீகக் காணிகளுக்காக இன்னும் எத்தனை நாட்கள் வீதியில் நிற்பது என கேள்வி எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

500 நாட்களாக வீதியில் நின்று போராடியும் இதுவரை தமக்கு தீர்வு கிடைக்காத நிலையில், தமக்கான பிரச்சினைக்கு தாமே முடிவு தேடிக் கொள்ளவுள்ளதாகவும், அந்தவகையில் உரிய முறையில் விடாவிடின் யாருடைய அனுமதியுமின்றி தமது காணிகளுக்குள் உள்நுழைய போவதாகவும்  போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமது பூர்வீகக் காணிகளுக்குள்  நுழைவதற்கு எதிராக எவரும் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மக்கள் போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தலைவர் கனகையா தவராசா, உப தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்துக் கொண்டிருந்ததாக அங்குள்ள எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.