யாழில் கதறி அழுத காணாமல்போனோரின் உறவுகள்!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று 9 மணிமுதல் 10.30வரை நெடுந்தீவு ஊர்காவற்றுறை, வேலணை, காரைநகர்,
யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பழை முதலான பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள காணாமல்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட உள்ளது.

10.45 முதல் 12.15 வரை கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி முதலான பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள காணாமல்போனோரின் உறவுகளுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, ஊடக சந்திப்பும், சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பும் இடம்பெற உள்ளது.

நாளைய தினம் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில், முற்பகல் 9.30 முதல் 11.30 வரை காணாமல்போனோரின் உறவினர்களுடனும், 11.45 முதல் 12.45 வரை சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறள்ளதாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவித்துள்ளது.

தாய்மாரின் எதிர்ப்பினை அடுத்து கொழும்பில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் செய்வதறியாது தடுமாறியுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments

Powered by Blogger.