யாழில் காதலனின் மனமாற்றத்தால் மனமுடைந்த காதலி !

தனது காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தமையால் மனமுடைந்த 21 வயது யுவதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


குறித்த சம்பவம் யாழ். இளவாலைப் பகுதியில் நேற்றைய தினம்(1507.2018) இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறிப்பிட்ட யுவதி நீண்டகாலமாக இளைஞரொருவரைக் காதலித்து வந்த நிலையில் அண்மையில் அவர் தான் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால், மன விரக்தியடைந்த குறித்த யுவதி தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார்.

விஷமருந்திய நிலையில் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார். 

No comments

Powered by Blogger.