மட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்ப்பு!

வாய் பேசமுடியாத தமிழ் பெண்ணுக்கு அதே மாதிரி இயல்புடைய கணவன் குடும்பத்திற்கு அடுத்தடுத்த வயதிலுள்ள நான்கு
பிள்ளைகள் இப்படி அமைந்தவர்களுக்கு குழந்தைகளின் கல்வி செலவு அன்றாட வாழ்க்கை செலவு இவற்றை ஈடுகட்ட கணவனின் கூலித்தொழில் மூலம் கிடைக்கும் பணம் போதாமை இதனால் மட்டக்களப்பில் தமிழரின் பகுதியில் முக்கியமான எது இருக்கின்றதோ இல்லையோ?

ஆனால் வீதிக்கு ஒரு சாரய தவரணை, CD கடைகள் , நுண்கடன் நிறுவனங்கள் இவை ஆங்காங்கு காட்சியளிக்கும் இதில் நுண்கடன் நிறுவனங்கள் தர்மவான்கள் போல மக்களுக்கு வாரி வழங்கி விசாலமான மனப்பான்மையாக எவருக்கும் பாரபட்சம் இல்லாமல் எத்தனை வீதம் வட்டியென்றாலும் நோயாளியா, நிரந்தர தொழில் குடும்பம்நிலை, எதுவும் ஆராயமால் வழங்கி யுத்தத்தில் இறந்த தமிழர் சில ஆண்டுகாலமாக குறைவு என்பதால் அச்சமநிலையை தற்போது சீர்செய்ய நுண்கடன் எனும் எமன்கள் பாதைக்கு பாதை கையில் ஆயுதம் இல்லாமல் குளிரூட்டப்பட்ட நிறுவனத்திலிருந்து கௌரவமான முழுக்கைச்சட்டை சேட், ரவுசர் டை அணிந்து ,காலுக்கு சூ வேற போட்டுத்து யாராவது ஏமாளி தமிழன் வருவானா தமது அலுவலத்தை தேடி தூக்கி பசப்பு கடன் வலையை விரித்து சீக்கிரமாக ஆயுளை முடிக்க காத்திருக்கின்றார்கள்.

இவ்வலையில் பல அப்பாவி ஏழைகள் வீழ்ந்து வலையை விட்டு வெளிவர முடியாமல் தமது உணவு உட்கொள்ளுவதை சுருக்கி அயலவருடன் பழகுவதை நிறுத்தி இறுதியில் உளவியல் ரீதியில் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு அதன் முடிவு தற்கொலை அங்கிருந்து இன்னுமொரு அநாதரவாக விடப்பட்ட குழந்தைகளின் நரக வாழ்க்கை அத்தியாயம் தொடருகின்றது.

இத்தற்கொலை பற்றிய மேலதிக தகவல்!

மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியல் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி வேலூர் ,காளிக்கோயில் வீதி , 4 ஆம் குறுக்கு வேலூர் கொலனி பகுதியை சிறந்த ஜோன்சன் மேகலா வயது 42 வாய் பேசமுடியாத நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே அவரது வீட்டின் முன் விறாந்தை பகுதியில் இருந்து இன்று பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் .

குறித்த பெண்ணின் கணவர் வாய்பேச முடியாதவர் எனவும் இவர் கொழும்பில் தொழில் புரிவதாக தெரிவிக்கும் உறவினர்கள் , இவர்களுக்கு 14 , 12 , 7 ,6 ஆகிய வயதுடைய நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக குறித்த பெண் பெற்றுக்கொண்ட நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொலிஸ் குழுவினரும் மற்றும் காத்தான்குடி பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.