கூட்­டாட்­சி­யைக் கோரு­வது ஏன்? – ரணில் முன்­பாக எடுத்­து­ரைத்­தார் விக்­னேஸ்­வ­ரன்!

அதி­கா­ரப் பகிர்வு பற்­றிக் கூறிக்­கொண்டு மாகா­ணங்­களை சுய­மாக இயங்க விடாது மத்தி தனது கட்­டுப்­பாட்­டி­னுள் வைத்­தி­ருக்­கப் பார்ப்­பது நியா­ய­மான ஒரு விட­யம் அல்ல. அத­னா­லேயே நாங்­கள் கூட்­டாட்­சி­யைக் கோருக்­கின்­றோம். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.
யாழ்ப்­பா­ணம் வர்த்­தக தொழில்­துறை மன்­றம் மற்­றும் தேசிய வர்த்­தக அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் ஆத­ர­வில் புதிய தொழில்­மு­னை­வோ­ருக்­கான மதிப்­ப­ளிப்­பும் விருது வழங்­கும் வைப­வ­மும், செல்வா பல­ஸில் நேற்று இரவு இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, போர்க் காலத்­தில் கூட இங்கு வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் சிறப்­பாக இருந்­தது. பணப் புழக்­கம் இருந்­தது. போரின் பின்­ன­ரான கடந்த 9ஆண்­டு­க­ளில் வடக்கு வர்த்­தக நட­வ­டிக்கை சுழி­ய­மா­கவே இருக்­கின்­றது.
வடக்­குக்கு வெளி­யில் உள்ள வர்த்­த­கர்­க­ளின் உள்­நு­ழைவு எங்­கள் வர்த்­த­கர்­க­ளைப் பாதிக்­கின்­றது. புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் முத­லீ­டு­கள் வடக்­கில் போரின் பின்­னர் முத­லி­டு­வ­தற்­கு­ரிய சூழல் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.
கொழும்பு அரசு அதனை விரும்­ப­வில்­லைப் போலும். தெற்­கி­லி­ருந்து முத­லீ­டு­கள் வர­வேண்­டும் என்று எதிர்­பார்க்­கின்­றார்­கள். வடக்கு – கிழக்கு மாகா­ணங்­கள் ஏனைய மாகா­ணங்­களை விஞ்­சக் கூடாது என்ற நோக்­கில் செயற்­ப­டு­கின்­றார்­களோ தெரி­ய­வில்லை.
வடக்கு மாகாண அர­சுக்கு வர்த்­தக வாணி­பங்­களை கவ­னிப்­ப­தற்கு அமைச்சு இருந்­தா­லும், எங்­க­ளது அதி­கா­ரங்­களை மீறி கொழும்பு அரசு ஆதிக்­கம் செலுத்­து­கின்­றது. போரின் பின்­னர் ஆரம்­பிக்­கப்­பட்ட நுண்­க­டன் நிறு­வ­னங்­க­ளின் பசப்பு வார்த்­தை­க­ளால் எங்­கள் வர்த்­த­கர்­கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்­கள்.
ஏனைய பகு­தி­க­ளில் இருந்து வரு­கை­தந்து இந்­தப் பகு­தி­க­ளில் வர்த்­த­கங்­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­கள் பற்றி எமக்கு ஆட்­சே­பனை இல்­லா­த­போ­தும் அவர்­க­ளின் வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் இங்­குள்ள ஒட்­டு­மொத்த வர்த்­த­கர்­க­ளின் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்­குப்­பா­திப்பு ஏற்­ப­டுத்­தாத வகை­யில் அமை­யு­மா­யின் அவ்­வா­றான வர்த்­த­கங்­கள் வர­வேற்­கக்­கூ­டி­யன.
தற்­போ­தைய நிலை­யில் இந்­தப் பகு­தி­க­ளில் உள்ள வர்த்­தக மூல வளங்­கள் மற்­றும் மனித வளங்­கள் அனைத்­தும் பிற தேவை­க­ளுக்­காக அது­வும் வட­ப­கு­திக்கு வெளி­யே­யான பகு­தி­க­ளின் முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது இப் பகு­தி­யின் வளர்ச்­சியை பின்­நோக்­கித் தள்­ளு­வ­தான ஒரு நட­வ­டிக்­கை­யா­கவே நாம் பார்க்­கின்­றோம்.
அண்­மை­யில் கொக்­கி­ளாய், கரு­வாட்­டுக்­கேணி போன்ற இடங்­க­ளில் இல்­ம­னைட் அகழ்­வு­கள் நடாத்­து­வது பற்றி எமக்­குக் கூறப்­பட்­டது. புல்­மோடை இணைந்த வடக்கு – கிழக்கு மாகா­ணத்­தின் கீழ் உள்­ள­டங்­கி­யி­ருந்­தால் அது வேறு விட­யம்.
இப்­போது வடக்கு மாகா­ணத்­தில் இருந்து வளங்­களை வெளியே எடுத்­துச் செல்ல எத்­த­னிக்­கின்­றீர்­கள் என்று நான் கூற­வும் எமது பிர­தே­சத்­துக்கு இதற்­கான ஒரு ஆலை­யைப் பெற்­றுத்­த­ரு­வ­தா­க­வும் இங்­குள்­ள­வர்­களை அதில் வேலை செய்ய இட­ம­ளிக்­கப் போவ­தா­க­வும் கூறப்­பட்­டது.
நான் இன்­னொரு வேண்­டு­தலை முன் வைத்­தேன். ஒரு மாகா­ணத்­தின் வளங்­க­ளின் வரு­மா­னத்­தின் பெரும் பகுதி திரும்­ப­வும் அதே மாகா­ணத்­துக்கு கொண்­டு­வர வேண்­டும் என்­றேன். அந்த வரு­மா­னங்­கள் மத்­திக்­குக் கிடைக்­கும் என்­றும் மத்தி எல்­லோ­ருக்­கும் பொது­வாக அவற்­றைப் பாவிக்­கும் என்று கூறப்­பட்­டது.
போரி­னால் பாதிக்­கப்­பட்ட எமது பிர­தே­சம் கூடிய வரு­மா­னங்­க­ளைப் பெற வேண்­டி­யி­ருக்­கும் இந்த நேரத்­தில் வளங்­களை மத்­திய அரசு தான் எடுக்­கப் பார்ப்­ப­தால் தான் நாங்­கள் கூட்­டாட்சி கேட்­கின்­றோம் என்­றேன். அதி­கா­ரப் பகிர்வு பற்­றிக் கூறிக்­கொண்டு மாகா­ணங்­களை சுய­மாக இயங்க விடாது மத்தி தனது கட்­டுப்­பாட்­டி­னுள் வைத்­தி­ருக்­கப் பார்ப்­பது நியா­ய­மான ஒரு விட­யம் அல்ல – என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.