பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை !

இலங்­கை­யின் சட்­டத்­தில் பெண்­கள் பாது­காப்­
புத் தொடர்­பாக அதி­க­ள­வான நடை­மு­றை­கள் இருந்த போதி­லும் தற்­போது, இடம்­பெ­றும் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வற்கு எந்த நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை என்­பது வருத்­தத்­துக்­கு­ரி­யது.
இவ்­வாறு தலைமை அமைச்­ச­ரின் பாரி­யா­ரும், பேரா­சி­ரி­ய­ரு­மான மைத்­திரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.
போரின் பின்­ன­ரான சூழ­லில் பெண்­க­ளின் தலை­மைத்­து­வம் மற்­றும் வலு­வூட்­டல் என்ற தலைப்­பி­லான பன்­னாட்­டுப் பெண்­கள் மாநாடு யாழ்ப்­பா­ணம் பொது­நூ­லக கேட்­போர் கூடத்­தில் நேற்று ஆரம்­ப­மா­னது.
யாழ்ப்­பாண மாவட்ட அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளில் இணை­யத்­தின் ஏற்­பாட்­டில் நேற்று ஆரம்­ப­மான இந்த மாநாடு, இன்­றும் நடை­பெ­ற­வுள்­ளது. மாநாட்­டின் மாலை நிகழ்­வில் தலைமை அதி­தி­யா­கக் கலந்து கொண்ட, தலைமை அமைச்­ச­ரின் பாரி­யார் மைத்­திரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் தெரி­வித்­த­தா­வது,
பெண்­க­ளின் பாது­காப்பு, பெண்­ணி­யக் கோட்­பா­டு­கள் எல்­லோ­ருக்­கும் பொது­வாக அமை­ய­வேண்­டும். போரின் பின்­னர் வடக்­கில் பெண்­க­ளின் உரி­மை­கள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. பெண்­களை வலு­வூட்­டும் செயற்­பாடு அர­சி­யல் உள்­ளிட்ட சகல வழி­க­ளி­லும் பல­வீ­ன­மா­கவே இருக்­கின்­றது. பெண்­களை வலு­வூட்­டும் செயற்­பா­டு­க­ளுக்கு போதி­ய­ளவு உத­வி­கள் கிடைக்­கப் பெறு­வ­தில்லை.
முத­லா­வது பெண் தலைமை அமைச்­சரை உரு­வாக்­கிய நாடு இலங்கை. இந்­தச் சிறப்பு இருந்­தா­லும், இன்று பெண் தலை­வர்­களை உரு­வாக்­கு­வது மிகக் குறை­வாக இருக்­கின்­றது.
225 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் 15 பேரே பெண் உறுப்­பி­னர்­க­ளா­கக் காணப்­ப­டு­கின்­ற­னர். அதி­லும் யாழ்ப்­பா­ணத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி ஒரு பெண் பிர­தி­நி­தியே காணப்­ப­டு­கின்­றார். பெண் தலை­வர்­கள் உரு­வாக வேண்­டிய கட்­டா­யம் காணப்­ப­டு­கி­றது.
பால்­நிலை சமத்­து­வம் தொடர்­பில், ‘ஜென்­டர் செல்’ என்ற திட்­டத்­தின் மூலம் முக்­கி­ய­மாக அனைத்­துப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­லும் காணப்­ப­டும் பகி­டி­வ­தை­களை கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரும் நோக்­கில் எந்த நேரத்­தி­லும் பகிடி வதை சம்­பந்­த­மான முறைப்­பா­டு­க­ளைச் செய்­யக் கூடி­ய­வாறு உமா குமா­ர­சாமி என்­ப­வ­ரின் நெறி­யாள்­கை­யில் திட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது – என்­றார்.
இந்த நிகழ்­வில், வர­வேற்­பு­ரை­யினை மக­ளிர் அபி­வி­ருத்தி நிலை­யத்­தின் பணிப்­பா­ளர் திரு­மதி சறோஜா சிவ­சந்­தி­ரன் வழங்­கி­னார். தலைமை உரை­யினை, அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளின் இணைத் தலை­வர் தே.தேவா­னந்த் வழங்­கி­னார்.
‘வளர்ந்த நாடு­கள் ஆய்­வு­க­ளுக்­கா­கப் பெருந்­தொ­கைப் பணத்தை செல­வி­டு­கின்­றன. ஆனால் வளர்­முக நாடு­கள் அவ்­வாறு செய்­வ­தில்லை. வளர்ந்த நாடு­கள் எம்­மைப் பற்றி ஆய்வு நடத்தி முடிவு சொல்­லும் நிலை­யி­லேயே நாங்­கள் இருக்­கின்­றோம்’ என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக விரி­வு­ரை­யா­ளர் திரு­மதி தே.ஜனனி தெரி­வித்­தார்.
யாழ்ப்­பா­ணத்­தில் 30 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­கள் இருப்­ப­தாக, யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக மேல­திக மாவட்­டச் செய­லர் திரு­மதி சுகு­ண­ரதி தெய்­வேந்­தி­ரம் தெரி­வித்­தார்.
போருக்­குப் பின்­னர் பெண்­கள் எல்லா நேர­மும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­றார்­கள் என்­ப­தைத்­தான் சகல போர்­க­ளும் உணர்த்துவ­தாக, இந்­தி­யப் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர் திரு­மதி டி.ஆர்.அரங்க மல்­லிகா தெரி­வித்­தார்.
நேற்­றைய முத­லாம் நாள் நிகழ்­வில், 7 ஆய்­வு­ரை­கள் முன்­வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

No comments

Powered by Blogger.