சாவகச்சேரி பிரதேச செயலகம் இரண்டாக பிரிகிறதா??

சாவகச்சேரி பிரதேச செயலாளர் புரிவுற்கு 32 கிராம சேவகர் பிரிவும் புதிதாக உருவாக்கும் கொடிகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் 28 கிராம சேவகர் பிரிவும் உள்ளடங்கும் வகையில் வர்த்தகமானி அறிவித்தலுக்கான பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் நா.வேதநாயக தெரிவித்தார்.இது தொடர்பில் மாவட்டச் செயலர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

இலங்கையில் தற்போதுள்ள 330 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 50 கிராம சேவக் பிரிவுகளிலும் அதிக கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளை இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளாக பிரிக்கும் யோசணை நீண்டகாலமாக கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த்து.

இருப்பினும் குறித்த பணி ஏனைய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி  மாவட்டங்களின்  நிலமை தொடர்பில் அண்மையில் பிரதமரைச் சந்தித்தவேளயில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுதொடர்பிலும் எடுத்துக்கூறப்பட்டது.

இதன்போது அச் சந்திப்பில் பங்குகொண்டிருந்த அனைவருமே சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவினை இரண்டாகப் பிரிப்பதன் மூலமே அபிவிருத்தி செய்ய முடியும் என்பதனை திடமாக வலியுத்தியமையினால் அதனை உடனடியாக முன்னெடுத்து ஏனைய மாவட்டத்தில் இடம்பெறும் இதேபணியுடன் ஒன்றாக வர்த்தகமானி அறிவித்தலுக்கு விரைவாக பணியாற்றுமாறு பிரதமரும் எம்மை பணித்தார்.

இதன் அடிப்படையில் குறித்த பணி மிக வேகமாக முன்னுடுக்கப்பட்டு அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏனைய மாவட்டத்திலும் சில பிரதேச செயலாளர் பிரிவுகள் இரண்டாகப் பிரிப்பதற்கான முன்னெடுப்புக்கள் பூர்த்தியாக்கப்பட்டு வர்த்தகமானி அறிவித்தலுக்காக அனுப்பப்படுகின்றது.

அதனுடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்ட சாவகச்சேரிப் பிரதேச செயலாளர் பிரிவினையும் இரண்டாகப் பிரித்து இயங்குவதற்கான வர்த்தகமானி அறிவித்தல் வெளிவரும்.

அவ்வாறு வெளிவரும் வர்த்தகமானி அறிவித்தலின் பின்னர் தற்போதுள்ள சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 32 கிராம சேவகர் பிரிவு உள்ளடங்கும் அதேநேரம் புதிதாக அமையவுள்ள  கொடிகாமம் பிரதேச செயலாளர் பிரிவினில் 28 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இயங்கும்  என்றார். 
Powered by Blogger.