முன்னாள் இலங்கை அணி வீரர் மரண தண்டனையை பாராட்டினார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையை மீளவும் அமுல்படுத்த வேண்டும் என்ற தீர்மானித்திற்கு முன்னாள் இலங்கை அணியின் வீரர் டில்ஷான் பாராட்டு தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வருகின்ற நிலையில் அவர் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

“போதைப்பொருட்களை மட்டுமல்லாமல், குறித்த சட்டம் குழந்தைகள் மீது தவறான மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் செயல்படுத்தப்பட வேண்டும்” என தெரிவித்த அவர் இந்த முடிவை ஜனாதிபதி நீண்ட காலத்திற்கு முன்னர் எடுத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

நாட்டை அபிவிருத்தி செய்ய அனைத்து குடிமக்களையும் ஒன்றுபடுத்த வேண்டும் தெரிவித்த டில்ஷான் நாட்டை காப்பாற்ற முடியாவிட்டால், மனித உரிமைகள் பாதுகாப்பதில் எந்த நோக்கமும் இல்லை என கூறினார்.

போதைப் பொருள்களின் பயன்பாடு மற்றும் குழந்தைகளின் துஷ்பிரயோகம் இன்று அச்சமூட்டும் வீதத்தில் அதிகரித்துள்ளது. எனவே மரண தண்டனை நிறைவேற்றுவது தற்காலத்தில் அவசியமானது என அவர் கூறினார்.

எங்கள் குழந்தைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் எதிர்காலத்தில் எமது வருங்கால தலைமுறையினருக்கு எதிர்காலம் இல்லாமல் போகும் சூழல் உருவாகும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இருப்பினும் அமைச்சர்கள் சிலரின் எதிர்ப்பிற்கு மத்தியில் மரண தண்டனை விதிப்பது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.