பயணிகள் பேருந்து கோர விபத்து!

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் கிளங்கன் கெந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகியிருப்பதாக நோர்வூட் காவற்துறை
தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும், மஸ்கெலியா பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற பேருந்து ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் போக்குவரத்து காவற்துறை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.