கருட பகவானை வழிபடுவதன் மூலம் கவலை தீர்ப்பார்!

ஸ்ரீ கருட பகவான் ஆடி சுக்லபஞ்சமி நன்னாளில் வேதத்திலும் ஜோதிட சாஸ்திரங்களிலும் மிகவும் உயர்வாகச் சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இந்தத் திருநட்சத்திரத்தில்தான் கருடாம்சமான பெரியாழ்வாரும் அவதரித்தார்.

பகவான் ஸ்ரீ நரசிம்மரின் திருநட்சத்திரமும் இந்த சுவாதிதான். ஆழ்வார்கள் ஸ்ரீ கருடனை கொற்றப்புள், தெய்வப்புள், காய்சினப்புள், ஓடும்புள் என்று பல விதமாகப் போற்றித் தம் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்..

பறவைகளின் அரசன் கருடன். பக்ஷிராஜன், சுபர்ணன், பன்னகாசனன், புஷ்பப்பிரியன், மங்களாலயன், கலுழன், ஸ்வர்ணன், புள்ளரசு, பெரிய திருவடி எனப் பல பட்டப் பெயர்கள் அவருக்கு உண்டு.

கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

ஸ்ரீகருட பகவானுக்கு மாதம் ஒரு முறை சிறப்பு பூஜை செய்துகருட மந்திரம் ஜெபிக்கப்பட்ட கருடரட்சை சிவப்பு கயிறு பக்தர்கள் அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் (ரூ.10க்கு) பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை அணிந்து பலனடைந்த பக்தர்கள் ஏராளம்.
தங்களை அர்பணித்து சரணாகதி ஆனவர்களை என்றும் கைவிடுவதில்லை அனந்த பத்மநாப ஸ்வாமி. ஆனந்தம் அளித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.

கவலைகள் சூழ் நிலைமையாக இருக்கிறதென்றால் கருட பகவான் களைந்திருகிறார். எதிரிகள் அதிகமாதலால் எதுவும் செய்யமுடியவில்லை பரந்தாமா என்றால் சுதர்சனர் இருக்கிறார்.

லக்‌ஷ்மி கடாட்ச்சமருள லக்‌ஷ்மி நரசிம்மரும், வீரத்தையும் பாதுகாப்பையும் அருள ஸ்ரீ துர்க்கையும், ’எமக்குத்துணையாய் இருப்பதுபோல் என் பக்தர்களையும் காப்பாயாக’ என்ற பெருமாளின் வேண்டுகோளுக்கிணங்க அனுமனும் இத்திவ்ய ஷேத்திரமாம் ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி திருக்கோவிலில் எழுந்தருளி அருளையும் ஆனந்தத்தையும் அருள்கின்றனர்.

ஆனந்தம் தொடரும் ......

தீவிர பக்தர்

No comments

Powered by Blogger.