சிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் நாளை ஆரம்பம்!

சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் நாளை(சனிக்கிழமை) பொலன்னறுவையில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலையாக குறித்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இதற்காக 12,000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

வட மத்திய மாகாணத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலுள்ள சிறுநீரக நோயாளிகளுக்காக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

அத்துடன், உலகின் நவீன ஆய்வுகூடம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு இந்த வைத்தியசாலை அமையவுள்ளது.

இந்த வைத்தியசாலையில் 200 கட்டில்களை கொண்ட வாட்டுத் தொகுதி, 100 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள், வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு, விசேட சிறுநீரக நோய் சிகிச்சை பிரிவு, சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை பிரிவு போன்ற நவீன சத்திர சிகிச்சை பிரிவுகளும் உள்ளடக்கப்படவுள்ளன.

24 மாதங்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டம் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவு செய்யப்படவுள்ளது.

#Kidney   #Kidney _work  #Kidney_Hospital   #Srilanka   #Polanaruvai #Maithiri  #China

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.