ரணில் விக்கிரமசிங்க நாளை வட மாகாணத்திற்கான விஜய மர்மம் என்ன?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை(சனிக்கிழமை) வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வழங்கப்பட்டுள்ள புதிய நோயாளர் காவு வண்டி சேவையினை ஆரம்பித்தும் நோக்கிலேயே பிரதமர் வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, பிற்பகல் 1.30 மணிக்கு கிளிநொச்சி இரணை மடு சந்தியில் இடம்பெறும் கம்பெரெலிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பிரதமர் பிற்பகல் 3.30 மணிக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவு வண்டி சேவையினை ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

இந்த நிகழ்வானது யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, வட மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன், வட மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இணையம் ஓடகாக அங்கு உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, நாளை மறுதினம்(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ள தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்விலும் பிரதமர் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.