தயான் ஜெயதிலகவின் நியமனத்தை இடைநிறுத்த தீர்மானம்!

ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான் ஜெயதிலக நியமிக்கப்படவுள்ளமையினை இடைநிறுத்துவதற்கு உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தயான் ஜெயதிலகவின் நியமனத்திற்கு எதிராக கிடைத்துள்ள முறைப்பாடுகளைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் தயான் ஜெயதிலகவின் நியமனத்திற்கு எதிராக 15 சிவில் அமைப்புகள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.