ரசிச்சு சாப்பிடும் மினி மீல்மேக்கர் உப்புமா!

உப்புமாவான்னு சலிச்சுக்கிறவங்ககூட ரசிச்சு சாப்பிடும் மினி மீல்மேக்கர் உப்புமாவைச் செய்றது எப்படின்னு பார்க்கலாம் வாங்க...


தேவையான பொருட்கள்:

மினி மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) - ஒரு கப் (வேகவைக்கவும்)

சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - கால் கப் உப்பு

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கப்

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

சாட் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை - சிறிதளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பைத் தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, மிளகுத்தூள், உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கவும். உருளைக்கிழங்கு வெந்ததும், வேகவைத்த மீல்மேக்கரை நீரை ஒட்ட வடித்துவிட்டு இதில் சேர்த்துக் கிளறவும். பரிமாறும்முன் சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் பனீர் துருவலும் தூவி சாப்பிடலாம். மினி மீல்மேக்கரில் சூடான நீரை ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும், வெந்துவிடும். சின்ன பீஸ் கிடைக்கவில்லை என்றால் பெரிய மீல்மேக்கரை நீரில் வேகவிட்டு நீரை ஒட்டப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

No comments

Powered by Blogger.