இரணைமடு குளத்தின் அபிவிருத்திப்பணிகள் முடிந்ததாம்!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேரில் சென்று பார்வையிட்டார்.ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரணைமடு குளத்தின் பிரதான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குளத்தின் அணைக்கட்டு உயர்த்தல், வான் கதவுகள் புதிதாக அமைத்தல் மற்றும் புனரமைத்தல், அணைக்கட்டின் உட்பகுதி புனரமைப்பு, புதிய மேம்பாலம் அமைத்தல், நீர் தடுப்பு அணைக்கட்டு அமைத்தல் உட்பட பல பணிகள் இடம்பெற்று பூர்த்தியாகும் நிலையில் காணப்படுகின்றன.

இந்த அபிவிருத்திப் பணிகளையே ஆளுநர் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர் றெஜினோல்ட் குரே , அடுத்துவரும் மாதங்களில் இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகள் நிறைவுபெறவுள்ளது. இதன் பின்னர் இந்த குளத்திலிருந்து விவசாயிகள் அதிகளவான நன்மைகளை பெறுவதோடு யாழ்ப்பாணத்திற்கும் குடிநீர் விநியோகிப்படும் எனவும் தெரிவித்தார்.

மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் பொறியியலாளர் வே பிறேமகுமார் இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கு விளக்கமறித்தார்.இந்த நிகழ்வல் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் சுந்தரம் டிவகல்லா இமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.