மீண்டும் தேசிய அமைப்பாளர் பதவியில் ராஜாராம்!

மத்திய மாகாண சபையின் உறுப்பினர் ஆர்.ராஜாராம் மலையக மக்கள் முன்னணியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியில் தொடரலாம் என அக்கட்சியின் உயர்பீடம் அறிவித்துள்ளது.


மலையக மக்கள் முன்னணியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் நேற்று (சனிக்கிழமை) நுவரெலியாவில் கூடிய கட்சியின் உயர்பீடம் இம்முடிவை எடுத்துள்ளது.

இது தொடர்பாக விசாரணைக் குழுவின் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளர் சங்கரன் விஜயசந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் கடந்த வாரம் கட்சியின் செயலாளரால் தற்காலிகமாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றைய கட்சியின் உயர்பீட கூட்டத்தில் குறித்த அறிவிப்பு வாபஸ் பெறுவதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அவர் கட்சியின் தேசிய அமைப்பாளராகத் தொடர்ந்தும் செயற்படுவதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்கால கட்சியின் நன்மை கருதியும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்களை சுமுகமான முறையில் கொண்டு செல்வதற்கும், இனிமேல் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாது என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலும் இந்த தீர்மானத்தை கட்சியின் உயர் பீடம் மேற்கொண்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.