சூர்யா பிறந்தநாளுக்கு விக்ரம் கொடுக்கும் விருந்து! ரசிகர்களுக்கு குத்தாட்டம் தான்!

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படத்தின் பாடல்கள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படம் சாமி. இந்த படத்தின் இரண்டாவது பாகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு ’சாமி ஸ்கொயர் என்ற பெயரில் தயாராகியுள்ளது. விக்ரம், பிரபு, பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை முதல் பாகத்தை எடுத்த இயக்குர் ஹரியே இயக்கியுள்ளார். 
கடந்த மாதம் வெளியான இப்படத்தின் டிரைலரை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் அதிரூபனே அதிகாரனே பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. இதையடுத்து இப்படத்தின் மொளகாப்பொடியே பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடிகர் சூர்யாவின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு சியான் விக்ரமின் சாமி ஸ்கொயர் ஆடியோ வெளியாகவுள்ளது. இது சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் விக்ரம் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.