IARAன் சர்வதேச சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நடிகர் விஜய்!


சென்னை: இங்கிலாந்தின் பிரபல IARA
விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் IARA என்ற பெயரில் சர்வதேச சாதனை மற்றும் அங்கீகார விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நடப்பாண்டில் ஒரு இந்தியரின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதிலும் இருபிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் தமிழ் திரையுலகின் தளபதி விஜய்.
IARA 2018ன் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய பிரிவுகளில் நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 
முன்னதாக இங்கிலாந்தின் தேசிய விருதை விஜய் தவறவிட்டு விட்டார். இந்நிலையில் 2018ஆம் ஆண்டிற்கு சர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கு விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.