சுவிஸ் வங்கிளில் கேட்பாரற்றுக் கிடக்கும் இந்தியப் பணம்!

சுவிஸ் வங்கிகளில் செயலற்றுக் கிடக்கும் இந்தியக் கணக்குகளின் பட்டியல் 2015ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில்
ரூ.300 கோடி இந்தியப் பணத்துக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இந்தத் தொகை ஆறு வங்கிக் கணக்குகளில் பிரிந்து கிடக்கிறது. இவற்றில் மூன்று கணக்குகளின் உரிமையாளர்கள் இந்தியாவில் வசித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பியர் வசேக் மற்றும் பெர்னெட் ரோஸ்மேரி பம்பாயை (தற்போதைய மும்பை) சேர்ந்தவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. டேராடூனைச் சேர்ந்த பகதூர் சந்திர சிங், பாரிஸைச் சேர்ந்த டாக்டர் மோகன் லால், லண்டனைச் சேர்ந்த சச்சா யோகேஷ்ச் பிரபுதாஸ் ஆகியோரும் இப்பட்டியலில் அடங்குவர். கிஷோர் லால் என்பவரின் வசிப்பிடம் மட்டும் குறிப்பிடப்படவில்லை. இந்த ஆறு நபர்களில் பியர் வசேக்கின் பிறந்த தினம் (ஜனவரி 1, 1908) மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

குறைந்தது 1954ஆம் ஆண்டு முதல் இந்த ஆறு கணக்குகள் செயலற்று இருக்கின்றன. சுவிஸ் சட்டங்களின்படி, இவ்வளவு ஆண்டுகள் செயலற்றுக் கிடக்கும் வங்கிக் கணக்குகளின் தகவல்களை மட்டுமே வெளியிடலாம். தகவல்கள் வெளியிடப்பட்ட ஐந்து ஆண்டுகளில் அப்பணத்துக்கு யாரேனும் உரிமை கோரலாம். ஐந்து ஆண்டுகளில் பணத்துக்கு உரிமை கோரத் தவறினால், அப்பணம் அரசுக்கு வழங்கப்படும். ஆக, மேற்கண்ட ஆறு கணக்குகளின் தகவல்களும் 2015ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டுவருகிறது. 2020ஆம் ஆண்டு வரை பணத்துக்கு உரியவர்கள் உரிமை கோரலாம். 
Powered by Blogger.