தாளையடியில் படகு ஒன்று விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது!

வடமராட்சி கிழக்கு தாளையடியில் படகு ஒன்றுக்கு இன்று அதிகாலை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.கடல் தொழிலை தனது ஜீவனோபாயமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே எரியூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.அண்மையில் கட்டைக்காடு கடற்கரையில் படகும் வெளியிணைப்பு இயந்திரமும் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் இது இரண்டாவது சம்பவமாக இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கை மீனவர்கள் இப்பகுதியில் கடலட்டை பிடிப்பதற்க்காக வந்த சில மாதங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன என்று மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.