வன்முறைகளுக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் முறையாக மாகாண சபைக்கு பகிரப்பட வேண்டும்!

வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் முறையாக மாகாண சபைக்கு பகிரப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் வடக்கு விஜயத்தை தொடர்ந்தும் யாழில் வன்முறைகள் தொடர்கின்றமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டுமாயின் இந்த பிரதேசத்தில் பேசப்படுகின்ற மொழியை தங்களது தாய்மொழியாகக் கொண்டவர்கள் இங்கே பொலிஸ் கடமையில் ஈடுபட வேண்டும். இல்லாவிடில் வன்முறைகளை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விடயமாக அமையும்.

ஆனால், இந்த நடைமுறைகள் ஏற்படுத்தப்படும்வரை வடக்கில் தொடரும் வன்முறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எனவே, மத்திய அரசாங்கம் விரைந்து இது தொடர்பாக உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.