இயக்குநர் ஆர்.தியாகராஜன் மறைவு!

கமல், ரஜினி வைத்து திரைப்படங்கள் இயக்கிய பிரபல
இயக்குநரும், சாண்டோ சின்னப்பாத் தேவரின் மருமகனுமான ஆர்.தியாகராஜன் சென்னையில் இன்று(ஜூலை 1) காலமானார். அவருக்கு வயது 75.

ரஜினிகாந்த் நடிப்பில் , தாய் மீது சத்தியம், தாய்வீடு, அன்புக்கு நான் அடிமை, ரங்கா உட்பட 11ஹிட் படங்களை ரஜினியை வைத்து இயக்கியவர். கமல் ஹாசன் நடித்த ராம் லக்ஷ்மனன், தாய் இல்லாமல் நான் இல்லை போன்ற படங்களோடு வெள்ளிக்கிழமை விரதம், ஆட்டுக்கார அலமேலு உடபட மொத்தம் 28 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னோடிகளுள் ஒருவரான சாண்டோ சின்னப்பா தேவரின் மூத்த மகள் சுப்புலட்சுமி, இவர் மனைவி. சென்னை போரூரில் வசித்து வந்த இவருக்கு இன்று(ஜூலை 1) காலை திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

இயக்குநர் ஆர்.தியாகராஜனின் மறைவு அவரது குடும்பத்தினரையும், திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தியாகராஜனின் உடல் அஞ்சலிக்காக போரூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிச்சடங்கு நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள மின்சார மயான பூமியில் நடக்கவுள்ளது.
Powered by Blogger.