தோனி பந்தை வாங்கிச் சென்றது ஏன்?
தோனி ஓய்வு பெறப் போகிறார் எனக்கூறப்பட்டு வந்த விவகாரத்தில் தற்போது சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா 1-2 என தோற்றது. இதன் கடைசிப் போட்டி முடிந்தபோது போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்தை அம்பயரிடமிருந்து கேட்டு வாங்கிச் சென்றார் தோனி.
பொதுவாக முக்கியமான ஒரு போட்டி முடிந்ததும் போட்டியின் நினைவாக பந்தையோ, ஸ்டெம்பையோ அல்லது பிற பொருட்களையோ கையில் எடுத்துச் செல்வது வழக்கம். சிலர் கடைசி போட்டியில் விளையாடும்போது இவ்வாறு செய்வர். தோனியும் இதுபோல செய்ததால் அவர் ஓய்வுதான் பெறவிருக்கிறார் என பலரும் கூற ஆரம்பித்தார்கள். மெதுவான பேட்டிங்கால் தோனி மீது வைக்கப்பட்டிருந்த விமர்சனங்களும் அதற்கு வலுவூட்டுவதாகவே இருந்தன.
தற்போது தோனி ஓய்வு பெறவில்லை எனும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று (ஜூலை 19) இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “தோனி பந்தை வாங்கியது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருணிடம் அதைக் காண்பிப்பதற்காக மட்டுமே. பந்தின் தன்மையை ஆய்வு செய்து கள நிலவரங்களை அறிந்து கொள்ளவே அவ்வாறு செய்திருக்கிறார். மற்றபடி ஓய்வு பெறுவதற்காக இல்லை” எனக் கூறியுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை