ஐ.நா ஆசிய பசிபிக் அரசியல் குழுவினர் சந்திப்பில் நடந்தது என்ன?

நியூயோர்கில் உள்ள ஐக்கிய நாட்டு அரசியல் விவகார துறையின் ஆசிய-பசிபிக் பிரிவின் பணிப்பாளர் திருமதி மரி யமஷிட்டா இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா இடையில் சந்திப்பு நடைபெற்றது. இராணுவ தலைமையகத்தில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.



இதன்போது இராணுவ நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது இராணுவத்தின் பல சமூகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை முன்னேற்றத்தை பற்றி விளக்கினார்.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட சிவிலியன்களின் நலன்களுக்காக அந்தந்த பகுதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் படி இராணுவ தளபதியயுடன் ஐ.நா. அரசியல் விவகார துறையின் ஆசிய பசிபிக் பிரிவின் பணிப்பாளர் திருமதி மரி யமஷிட்டா கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பில் இலங்கையின் ஐ.நா.அமைதிகாக்கும் படையினர்களின் அமைதிகாக்கும் பணிகளில் செயல் திறன்கள் மற்றும் அவைகளை சரியான முறையில் கையாள்வது எப்படி என்றும் அதற்கு தேவையான நடைமுறைகளை கவனிக்க வேண்டும் என்றும் திருமதி மரி யமஷிட்டா நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பில் இராணுவ பாதுகாப்பு மற்றும் போருக்குப் பிந்தைய காலத்தில் முரண்பாடுகள் நிறைந்த முயற்சிகளை அதிகரிப்பதற்காக இராணுவத்தின் பங்களிப்புகளையும் பொறுப்புகள் பற்றியும் கலந்துறையாடினர்.

இச்சந்திப்பின் போது நினைவுச்சின்னம் பரிமாறப்பட்டது. அத்துடன் சிறப்பு விருந்தினர்களுக்கான புத்தகத்திலும் திருமதி மாரி யமஷிடா கையொப்பமிட்டார்.இந்த நிகழ்வில் ஐ.நா. பிரதிநிதி மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகளின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.