சென்சாரால் ஏதும் சொல்ல முடிவதில்லை-வெங்கட் பிரபு!

சென்சாருடன் சண்டை போட்டே நிறைய விஷயங்களை திரைப்படங்களில் சொல்ல முடிவதில்லை என்று, சமீபத்தில் நடந்த ‘வியு ஆப்’ செயலி அறிமுக விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.

ஹாட் ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற பல வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களின் வரிசையில் அடுத்ததாக தடம் பதிக்க வருகிறது, ‘வியுஅப் (Viu App)'. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆன்லைன் பொழுதுபோக்கு சேவையை இலவசமாக வழங்கிவரும் நிறுவனமான Vuclip-க்குச் சொந்தமானதுதான் இந்தச் செயலி. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், டெல்லி, மும்பை, புனே, துபாய் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இதுவரை, பல அந்நிய மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் செயல்பட்டுக்கொண்டிருந்த `வியூ ஆப்' நேற்று முன்தினம்முதல் (ஜூலை 25) தமிழிலும் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சுனைனா, புஷ்கர் - காயத்ரி, பூஜா தேவரியா, அஷ்வின், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தச் செயலியில் குறும்படங்கள், வெப் சீரிஸ், திரைப்படங்கள் மற்றும் கொரியன் சீரியல்களைத் தமிழில் காணலாம். இதுகுறித்து, Vuclip நிறுவனத்தின் CEO அருண் கூறியதாவது, “தமிழ் ரசிகர்கள் நவீன நடைமுறைகள் மற்றும் கலாச்சாரங்கள் பற்றி நல்ல ரசனை உடையவர்கள். நடுநிலையான பார்வை உடையவர்கள். அவர்கள் உள்ளூர் பாணியில் சொல்லப்படும் சிறந்த கதைகளை விரும்புவார்கள். அப்படியான சிறந்த பொழுதுபோக்கினை இலவசமாக வழங்குவதில் பெருமையடைகிறோம்!” என்று கூறினார். இவ்விழாவில், இந்தச் செயலி மூலம் ஒளிபரப்பப்படவிருக்கும் குறும்படங்கள் பற்றிய அறிமுகம் கொடுக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.