கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பெரும் பதற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த 27ஆம் திகதி பெண் சுங்க அதிகாரி ஒருவர் உள்ளிட்ட ஐவர் மீது குவைத் நாட்டு தம்பதியினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

குறித்த குவைத் நாட்டு தம்பதியினர் நாய் ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட சுங்கப் பிரிவினர் நாயை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரினர்.

எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த குவைத் பிரஜைகள் சுங்க அதிகாரிகள் மீது இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
Powered by Blogger.