பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன்!
திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவுக்கு இரண்டு வழக்குகளில் ஜூலை 2ஆம் தேதி முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 12ஆம் தேதி கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாகத் திரைப்பட இயக்குநர் அமீர் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அமீருக்கு ஆதரவாக நிருபர்களைச் சந்தித்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தேசத்திற்கு விரோதமாகவும், தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தமிழக அரசை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், இரண்டு பிரிவுகளின் கீழ் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஐபிஎல் போட்டிகளின்போது காவல் துறையைத் தாக்க தூண்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த இரண்டு வழக்குகளிலும் முன் ஜாமீன் கோரி இயக்குநர் பாரதிராஜா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தினமும் காலை 10.30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை