தூய்மை செய்..!தகாத செயல்கள்
ஊரிலே இப்போது
தாவித்திரியும் நேரமிது போலும்..


திருட்டுக் கும்பல் நோக்கம் தீர்ந்தபின்
தீண்டிச் செல்வது பெண்களைத்தான்....

துடிக்கும் இளமையின் தீரா இச்சையைத்
தூர்த்தக் குணம் மீறிப் பாய்ந்த போது..

தெரிவில்லைப் பெண்ணென்று
தேர்ந்தது எவரெனினும்
தைத்தியக் குணத்தோடே புணர்ந்திடுவார்..

தொளையுள்ள இடமெல்லாம்
தோய்ந்து முழுக்கிட
தரங்கெட்டவனே பெண்கள் குளமாடா..

தாய்க்குச் சமமான வயதுடைப் பெண்ணையும்
தினவெடுத்துடல் தின்னல் மனிதஇனமாடா..

தீய்ந்து போகும்படியுன் ஆண்குறி விறைப்புகள்
துண்டித்து விட்டால்தான் அடங்குவாயோ..

தூய்மை செய்வாய் நாட்டைத் தமிழினமே
தெற்று நடத்தலைக் கண்டு சும்மா
தேங்காதே!

மகிழினி காந்தன்
சுவிஸ்
Powered by Blogger.