கம் பேக் கொடுத்த இஷா!

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் நடிகை இஷா கோபிகர் இணைந்துள்ளார்.


இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து சைன்ஸ் பிக்சன் பாணியில் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் 27ஆம் தேதி தொடங்கியது. சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நிலையில் மற்ற கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் படத்தின் மூலம் என் சுவாச காற்றே, ஜோடி, நெஞ்சினிலே எனப் பல படங்களில் நடித்த இஷா கோபிகர் தமிழில் மீண்டும் ரீ எண்ட்ரியாகிறார். படப்பிடிப்பில் இணைந்ததைப் புகைப்படத்துடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஷா, “24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் இணைந்தது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

முழுக்க பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த இஷா இந்தப் படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. தமிழில் சில படங்களில் நடித்து பின் பாலிவுட் செல்லும் நடிகைகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த் திரையுலகிற்கு திரும்பும் போது அவர்களுக்கு நெகட்டிவ் கதாபாத்திரமே கொடுக்கப்படுகிறது. மனிஷா கொய்ராலா, ஸ்ரீதேவி, கஜோல், மதுபாலா ஆகியோருக்கு அத்தகைய கதாபாத்திரங்களே அமைந்தன. அந்தவகையில் இஷா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் உள்ளன. இஷா கடைசியாக தமிழில் 17 ஆண்டுகளுக்கு முன் நரசிம்மா படத்தில் நடித்திருந்தார்.

யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

No comments

Powered by Blogger.