றெஜினா படுகொலை வழக்கு விசாரணை, மேலும் மூவரைக் கைது!

காட்டுப்புலம் மாணவி றெஜினா படுகொலை வழக்கு இன்று (11) மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாணவி
சார்பாக சட்டத்தரணி கே.சுகாஸ் மன்றில் முன்னிலையாகினார்.

றெஜினா படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்யவில்லை எனக் கூறிய சட்டத்தரணி, அவர்களைக் கைது செய்ய பொலிஸாருக்கு உத்தரவிடவேண்டும் என நீதிவானிடம் சமர்ப்பணம் செய்தார்.

இதையடுத்து அவர்களைக் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு நீதிவான் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவரும் இன்று மன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Powered by Blogger.