ரெலோவை விமர்சித்து தமிழரசுக்கட்சி செயலாளர் !

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தற்போதைக்கு மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லையென்றே
தெரிகிறது. தேசியப்பட்டியல் நியமனத்திற்காக அடம்பிடித்த தமிழரசுக்கட்சியின் நிர்வாக செயலாளர் எஸ். சேவியர் குலநாயகத்திற்கு அது தொடர்பான அறிவித்தல் கடிதத்தை, தமிழரசுக்கட்சியின் பொது செயலாளர் கி.துரைராசசிங்கம் அனுப்பியுள்ளார். அந்த கடிதம்  கிடைத்துள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பன் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தமக்கு தரப்படவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி நிர்வாக செயலாளர் சூ.சேவியர் குலநாயகம், பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். தமிழரசு கட்சி மத்தியகுழு கூட்டம் முல்லைத்தீவு ஓசன் பார்க் ரிசோர்ட் கோட்டலில் (16/06/2018ல்) இடம்பெற்ற போது குலநாயகம் அதிருப்தியடைந்து மூலையில் குந்தி இருந்து, கட்சியின் செயற்பாடுகளை விமர்சித்ததும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக தாம் எழுதிய கடிதத்திற்கு பதில் அனுப்பவில்லை என பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்க மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருந்தார்.

“தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக தமிழரசு கட்சி அரசியல் குழு கூட்டம் (15/06/2018ல்) கூடி ஆராய்ந்துள்ளது. அதற்கான பதில் விரைவில் எழுத்து மூலமாக குலநாயகத்துக்கு அனுப்பபடும்“ என கூறியிருந்தார்.

தற்போது பொதுச்செயலாளர் காலம் கடந்து- 20 நாட்களுக்கு பின்- 03/07/2018 ல் தேசிய பட்டியல் தொடர்பான கடிதம் ஒன்றை குலநாயகத்துக்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தின்படி தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தற்போது உள்ள சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும்  துரைரெட்ணசிங்கம் இருவரும் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள். தற்போதைக்கு தேசியபட்டியலில் மாற்றம் மேற்கொண்டால் பல சிக்கல் ஏற்படும் என்பதை அறிவித்துள்ளார்.

அதில் நான்கு காரணங்களைகுறிப்பிட்டுள்ளார்.

1.பதவி துறக்கும் உறுப்பினர்கள் அவர்களுக்கு சாதகமான கருத்துக்களை முன்வைக்கலாம்.

2.அடுத்த நியமனங்கள் தொடர்பில் வேறு சில உறுப்பினர்களும் ஆதரவாளர்கள் மூலமான கோரிக்கை விடுதல்.

3.ரெலோ இயக்கம் தனது உறுப்பினர் ஒருவருக்கு பதவி கேட்டு வற்புறுத்தல் செய்வது. 4.மிக அண்மையில் மகாணசபை தேர்தல்கள் வரவுள்ள நிலை.

தேசியப்பட்டியல் நியமனம் கிடைக்காத பட்சத்தில் சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டி வரலாமென ரெலோ எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தேசியப்பட்டியல் நியமனத்திற்காக ரெலோ தம்மை வற்புறுத்துவதாக கடிதத்தில் துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.