வேடிக்கை மனிதர்...!

பல்மொழிச் சிறப்பாளன்
பாரதி அன்னான்
பாப்பா பாட்டில் கூடப்
பகுத்தறிவு சொன்னான்..
பின்னடைவுக் கொள்கைகளைப்
பீதி கொள்ள வைத்தான்..

புல்லுருவி ஆதிக்கத்தைப்
பூட்டி விரட்டிக் கவி சொன்னான்..
பெரியமீசை கொண்டே ஒரு
பேரிகை முழக்கம் செய்தான்...
பைந்தமிழை உயிராய்ப்
பொந்து சந்தில் வளர்த்தான்..
போனான் இளமையிலே
பதிவுகள் போதுமென்று...
பாடுவார் ஆடுவார் அதைப்
பின் பற்ற மாட்டார்...
பீடிகை போட்டவர் மேடையில்
புலிபோலே பாய்வார்..
பூனைகள் பால் குடித்ததும்
பெரிய தூக்கம் போடுதல்போல்
பேராற்றல் புலமைப் பாடல்
பொறிகளை எடுத்தாண்டபின்
போராட்டம் இல்லாமலே
போய்த்தூங்கிப் போவர்..

மகிழினி காந்தன்
சுவிஸ்.

Powered by Blogger.