விஜய் சேதுபதியின் வியாபாரம் – ஒரு அலசல்!

தமிழ் சினிமாவில் தன் நடிப்புத் திறமையைக் காட்ட வாய்ப்பு கிடைக்காதா என்று 2004இல் ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. இன்று அவரிடம் கதை சொல்லத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவருடைய அலுவலகத்திற்கு ஏறி இறங்கிக்கொண்டிருக்கின்றனர்.


தமிழ் சினிமாவில் ரஜினி படம் விற்கவில்லை என்றாலும் விஜய் சேதுபதி நடித்த படங்கள் விற்பனை ஆகிவிடும். குறைந்தபட்ச ஓபனிங், குறைந்தபட்ச வசூலுக்கு உத்தரவாதமான கதாநாயகன் இவர் என்கின்றனர் சினிமா பட வியாபாரிகள்.

எம்.குமரன் s/o மகாலட்சுமியில் துணை நடிகராகக் கூட்டத்தோடு கூட்டமாக நின்றவர் இன்று தமிழ் சினிமாவில் எட்டுக் கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் கதாநாயகனாக மாற்றம் கண்டிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்த பின் விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமானது சீனு ராமசாமி இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில்.

சீனு ராமசாமி இயக்கிய படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை, புதிய பட வாய்ப்புகளும் இல்லாத நிலையில் தன்னை இயக்குநராக உறுதிப்படுத்திக்கொள்ளக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை சீனு ராமசாமி இயக்கினார்.

இனிமேல் சினிமா நமக்கு எட்டாக்கனி, அதில் காலத்தை விரயம் செய்வதைவிட நமக்குத் தெரிந்த அக்கவுன்டன்ட் வேலைக்கே போய்விடலாம் என விஜய் சேதுபதி முடிவு எடுத்த நேரம் தேடி வந்த வாய்ப்பு ‘தென்மேற்கு பருவக்காற்று’.

படைப்பு ரீதியாக அனைத்துத் தரப்பினரின் பாராட்டைப் பெற்ற இப்படம் திரையரங்குகளில் தாக்குப்பிடிப்பதற்குத் தடுமாற்றம் கண்டது.

அடுத்தடுத்து வெளியான பெரிய படங்களைத் திரையிடத் தியேட்டர் உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுத்ததால் தென்மேற்கு பருவக்காற்று குறைந்த நாட்களே தியேட்டர்களில் ஓடியது என்றாலும் கௌரவமான வசூலைப் பெற்றது.

ஒரு கோடிக்கும் குறைவான செலவில் 2010இல் எடுக்கப்பட்ட தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி இதுவரை 20 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

தமிழகத்தில் இவரது படங்கள் 8 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை வசூலாகப் பெறவில்லை. மாதவன், விஐய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா விதிவிலக்கு.

ஆனால், இவரது சம்பளம் கூடியிருக்கிறது. படத்தின் தயாரிப்பு செலவு கூடியிருக்கிறது. வசூல் அதிகரிக்கவில்லை. படங்களின் விலை ஏற்றம் காணவில்லை.

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக, பிரம்மாண்டமான பட்ஜெட் பட நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் விஜய் சேதுபதிக்கு ஏற்பட்டதன் விளைவு ‘ஜுங்கா’ திரைப்படம்.

28 கோடி ரூபாய் செலவில் முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் நாயகனும் படத்தின் தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி. இது வியாபார ரீதியாக சாத்தியமாகுமா, இதைப் பற்றிய விரிவான தகவல்கள்..

புதன்கிழமை.. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.