மீண்டும் சாவித்திரியாக கீர்த்தி!
நடிகையர் திலகம் திரைப்படத்தில், நடிகை சாவித்திரியாக நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்த கீர்த்தி சுரேஷ், தற்போது மீண்டும் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து மே 9ஆம் தேதி தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானத் திரைப்படம் நடிகையர் திலகம். தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி என வெளியானது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரி கதாபாத்திரம் ஏற்றுத் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார். அனைத்துத் தரப்பிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. அந்தப் பாராட்டு மழையில் இருந்தே அவர் இன்னும் மீண்டபாடில்லை. அதற்குள்ளாக மீண்டுமொருமுறை சாவித்திரியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
இம்முறை கீர்த்தி சாவித்திரியாக நடிக்கவிருப்பது நந்தமூரி பாலகிருஷ்ணாவின் திரைப்படத்தில். பழம்பெரும் நடிகரும், தனது தந்தையும் முன்னாள் ஆந்திரப்பிரதேச முதல்வருமான நந்தமூரி தாரக ராமாராவின் (என்டிஆர்) வாழ்க்கையை, நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார் என்பது திரை ரசிகர்கள் அனைவரும் அறிந்த செய்தி. அத்திரைப்படத்தை இயக்கவிருப்பது தெலுங்கு இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி.
இவர் மகாநடி திரைப்படத்தில் இயக்குநர் நாகி ரெட்டியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தான் இடம் பெற்ற மகாநடியில் கீர்த்தியின் அபார நடிப்புத் திறனைக் கண்டு வியந்தவராக இயக்குநர் கிருஷ், என்டிஆர் வாழ்க்கைச் சித்திரத்துக்காக மீண்டுமொருமுறை கீர்த்தியை சாவித்திரியாக்க முடிவெடுத்திருக்கிறார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை