சுஷ்மாவுக்கு எதிரான ட்ரோல்: ராஜ்நாத் கண்டனம்!
சமூக வலைதளத்தில் சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிராக நடைபெறும் கிண்டல்கள் தவறானவை என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த முகமது சித்திக் என்பவரும் தன்வி என்பவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் இவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது, கலப்பு மணம் புரிந்ததால் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டு அவர்களுக்கு பாஸ்போர்ட் பெற்றுக்கொடுத்தார். சம்பந்தப்பட்ட அதிகாரியும் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சுஷ்மாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பலரும் அவரை விமர்சித்து ட்விட்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், விமர்சனங்கள் கண்ணியமாக இருக்க வேண்டும் என்று சுஷ்மா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடு இருப்பது இயற்கையே. விமர்சியுங்கள். ஆனால், மோசமான மொழியில் அல்ல. கண்ணியமாக விமர்சனம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்று அவர் நேற்று பதிவிட்டிருந்தார்.
சுஷ்மாவுக்கு ஆதரவாக பொதுமக்கள் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பதிவிட்டிருந்தாலும் மத்திய அரசும் பாஜக கட்சியும் அவருக்கு எதிரான விமர்சனங்களுக்குக் கண்டனம் தெரிவிக்காமல் இருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில், சுஷ்மாவுக்கு எதிரான கிண்டல்கள் மிகவும் தவறானவை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி பிரின்ட் ஊடகத்துக்கு அவர் நேற்று (ஜூலை 2) அளித்துள்ள பேட்டியில், “தான் எதிர்கொள்ளும் ட்ரோல் தொடர்பாக அவர் பதிவிட்டதும் கடந்த வாரம் தொலைபேசியில் அழைப்பு விடுத்துப் பேசினேன். நாங்கள் சந்தித்துக்கொண்ட போது, இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் பேசினேன். என்னுடைய அனுதாபத்தைத் தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.
இதேபோல், சுஷ்மாவுக்கு எதிரான கிண்டல்கள் தவறானவை என்று ராஜ்நாத் கூறியதாக ஏஎன்ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.

.jpeg
)

கருத்துகள் இல்லை