கேரளா வெள்ள நிவாரணத்துக்கு -உதவும் முகநூல்!!

கேரள வெள்ள பாதிப்புகளுக்கு, இந்திய மதிப்பில் ரூ.1.75 கோடியை வழங்குவதாக முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிதி டில்லி தொண்டு நிறுவனம் ஊடாக வழக்கப்படவுள்ளது.முகநூல் தனது செயற்பாடுகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில், உதவி செய்வோரை குறித்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளோரோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக முகநூல் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் முகநூல் பயன்படுத்துவோர் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு உதவ  பிரத்தியேக குரூப்கள், லைவ் வீடியோக்கள் மற்றும் சிறப்பு பக்கங்களை ஆரம்பித்து நிவாரன உதவிகளில்  ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த 8 ஆம் திகதி தொடங்கிய மழை, வரலாறு காணாத அளவு கனமழையாக பெய்ய தொடங்கியது.
Powered by Blogger.