பீடி இலைகளைக் கடத்திய மூவர் கைது

கொழும்பு துறைமுகத்துக்கு சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட புகையிலை (பீடி ) அடங்கிய கொள்கலன்கள் இரண்டை சுங்க பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 130 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் புகையிலை வகையை சேர்ந்த பீடி இலைகளை சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இடப்பெயர்வு பொருள்களை கொண்டு வருவது போன்று அவற்றைக் கடத்தி வந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தொட்டலங்க சுங்க பிரிவில் நடத்தப்பட்ட தேடுதலின் போது கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பீடி இலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 14 தொன் பீடி இலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
Powered by Blogger.