சைட்டம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்- மைத்திரிக்கு மனு!

சைட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் அரச தலைவரின் செயலாளர் காரியாலயத்தில் இன்று மனுக் கையளித்தனர்.
சைட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவலை பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக் கொள்வதற்காக பணம் அறவிடுவதன் காரணமாக தாம் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகப் பெற்றோர் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்காரணமாக, சைட்டம் மருத்துவ கல்லூரி கட்டணத்தை முழுமையாக செலுத்திய மாணவர்களும், சைட்டம் மருத்துவ கல்லூரி மற்றும் அரசால் புலமை பரிசில் பெற்றுக்கொண்ட மாணவர்களும், பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுத் தரக் கோரி சைட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.