ஆசிரிய நியமனம்194 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!

வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் 194 பேருக்கு ஆசிரிய நியமனம் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தலைமையில் யாழ் பொது நூலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.தமக்கான நியமனங்களை வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.

இந் நிலையில் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.இதற்கமையவே வட மாகாணத்திலுள்ள பட்டதாரிகளில் 194 பேருக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில்  பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு இந் நியமனங்களை வழங்கி வைத்தார்.மேலும் நிகழ்வில் மாகாண அவைத் தலைவர் சிவஞானம் மற்றும் உறுப்பினர்கள் கல்வி அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் No comments

Powered by Blogger.