யாழ் மாநகர முதல்வர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் சந்திப்பாம்??

பிரான்ஸ் “வெளிச்சம்” வாழ்வியல் வளர்ச்சிக்கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஆகியோருடன் புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் முக்கிய அமைப்புக்களின்

பிரதிநிதிகள் ஆகியோருடன் மாநகர தேவை தொடர்பிலும் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பிலும்  சந்திப்புக்கள் இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனால்ட் தெரிவித்தார் .

பிரான்ஸ் நாட்டு பயணத்தில் 14/07/2018  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான  மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன்  ஆகியோருடன் புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பொன்று

பிரான்சு நாட்டில், “வெளிச்சம்” வாழ்வியல் வளர்ச்சிக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.இச்சந்திப்பில், முக்கியமாக புதிய அரசியல் யாப்பின் நகல் தொடர்பாகவும் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் விவகாரம் பற்றி தமிழர் தரப்பு நடவடிக்கைகள் பற்றியும் அதனைத் தொடர்ந்து மாநகரத்தின் தேவைகள் தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டது.

இதில்  தமிழருக்கான அரசியல்தீர்வு, அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாடு நோக்கிய நகர்வுகளில்,தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன்  இணைந்து செயற்படுவதற்கு, பங்குபற்றிய அனைத்து புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் அமைப்புக்களின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்டது. 

உத்தேச அரசியலமைப்பு வரைபு வெளிவருமென எதிர்பார்க்கப்படும் நிலையிலும், 2018 பங்குனியுடன் மனிதவுரிமை விவகார பொறுப்புக்கூறலிருந்து இலங்கை அரசு வெளியேறக்கூடிய அபாயமுள்ள நிலயிலும் இச் சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதேநேரம்  இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணை மற்றும் தாயகத்தின்  அரசியல் தீர்வு நடவடிக்கைகள் மற்றும் மீள்கட்டுமானம், சமூக பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமான வேலைகளிலும் இணைந்து செயற்படுவதென, இக் கூட்டத்தில் பங்குபற்றிய அனைத்துத் தரப்பினரதும் சம்மதத்துடன் தீர்மானிக்கப்பட்டது. 

அத்துடன் யாழ் மாநகர முதல்வருடனான சந்திப்பில் யாழ்நகர அபிவிருத்திப் பணிகளில்   மாநகரசபை எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

18 யூலை 2018  அன்று வெளிச்சம் வாழ்வியல் வழற்சி அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரபிதா ஆர்னோல்ட்  அவர்களுக்கும் பிரான்ஸ் நாட்டின் காஸ் சார்சல் Garges-Les-Gonesse  நகரசபையின் பிரதி நகர பிதா சேர்யியா மகேந்திரன்  மற்றும் நிதிவிடடயங்களுக்கு பொறுப்பான பிரதி நகரபிதா மரி குளுட் லலுடுகும் நட்பு ரீதியான சந்திப்பு நடைபெற்றது. 

இதன் போது யாழ் மாநகரசபை    பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இதில்  சிறுவர் முன் பள்ளிகளில்  கல்வி பயிலும் சிறுவர்கள் பயனடையக்கூடிய வகையில் கற்றல் உபகரணங்கள் மற்றும் போசாக்கு உணவு போன்ற விடையங்களில் உதவிகள் வழங்குவதற்கு ஆராய்வதாக தெரிவிகப்பட்டது.

இதற்கான விபரங்களை  அறிக்கையாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் புரட்டாதி மாதஇறுதிக்கால பகுதிதிகளில் உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெருவிக்கபட்டது.  முக்கியமாக எதிர்காலத்தில்  நகருடன் இணைந்து எவ்வாறு யாழ்மாநகரின் அபிவிருத்தியை முன்னெடுக்கலாம் என்றும் ஆராயப்பட்டது .

அத்தோடு   20ம் திகதி ஆடி மாதம் பிரான்ஸ் பரிசின் புறநகர் பகுதி Sevran நகர முதல்வர் திரு Stephane BLANCHET உடனான  சந்திப்பு ஒன்று Sevran நகரத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் யாழ் நகர அபிவிருத்தி மற்றும் மக்களின் அன்றாட பிரச்சனைகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டு அந்நகர முதல்வரிடம் இருந்து சில உதவித்திட்டங்களிற்கான சாதகமான பதில்களும் பெறப்பட்டது.

இச்சந்திப்பில் மாநகரமுதல்வரின் இரு நிர்வாக செயலாளர்கள் வில்லியம் கேர்மன்  திருமதி றொசான்டிரி வல்லேரி ஆகியோர்  கலந்துகொண்டனர்.  என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.