இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும்!

தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும் வரையில் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘இந்த நாட்டிலே, இந்த நாடாளுமன்றத்திலேயே அதே பதவிகள் தொடர்ந்தும் இருக்க வேண்டும். குறைந்தபட்சமாக தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு தரும் புதிய அரசியலமைப்பு வரும் வரையாவது சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தினை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை’ எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.