20 மில்லியன் ரூபாவுக்கு – கார் கொள்வனவு செய்யும் மாநகர சபை மேயர்!!

குருநாகல் மாநகர சபை மேயர் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காரொன்றை கொள்வனவு செய்யத்
தயாராகுகின்றமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் குருநாகல் மாநகர சபைக்காக போட்டியிட்டு, அதன் மேயராக துஷார சஞ்ஜீவ தெரிவு செய்யப்பட்டார்.இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய மாவட்டமான குருநாகல் மாவட்டத்தில் 10 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பின்றியும், 20 வீதத்திற்கும் அதிகமானவர்கள் அடிப்படை வசதிகளின்றியும் இருக்கின்றமை 2016 ஆம் ஆண்டு மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
தனது வீட்டில் இருந்து மாநகர சபைக்கு சுமார் இரண்டரை கிலோமீற்றர் தூரமே மேயர் பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில், வெளியாகியுள்ள புதிய தகவலால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.