லெப்.கேணல் மாதவன், லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி ஆகியோரின்21ம் ஆண்டு நினைவு நாள்!

புளியங்குளத்தில் சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் மாதவன்(சுனித்) ஆகியோரின் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

03.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா வான்படை நடாத்திய குண்டு வீச்சின்போது,

1. லெப்.கேணல் தட்சாயினி

(மனுவேற்பிள்ளை கிளறின்வுறோனா - புலோப்பளை, யாழ்ப்பாணம்)

2. கப்டன் பாஞ்சாலி

(சுபாம்பிள்ளை மேரிவென்சலற்றா - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது,

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் மாதவன் (சுனித்), (கில்பேட் டானியல் - செல்வபுரம், முல்லைத்தீவு) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

No comments

Powered by Blogger.