விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜேர்மனியில் கைது!

போர் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை தமிழர் ஒருவரை ஜேர்மனி பொலிஸார் கைது செய்துள்ளதாக the Associated Press செய்தி வெளியிட்டுள்ளது.

36 வயதான இலங்கைத் தமிழரே DÜSELDORF பகுதியில் வைத்து புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டள்ளது.

ஜேர்மனியின் கடுமையான தனியுரிமை சட்டங்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போர்க்குற்றம் மற்றும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர் 2006ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது 16 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன், இவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் நேற்று நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.