முல்லைத்தீவில் 5வது நாளாகவும் தொடரும் மீனவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிரான கவனயீர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் இன்று ஐந்தாவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

மேலும் இரவுபகலாக தொடர்ந்து மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது அமைப்புகளை சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

அத்துடன் தொடர்ந்தும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடித் தொழில்கள் இடம்பெற்றுவருவதாகவும், இன்றைய தினமும் வெளிமாவட்ட மீனவர்கள் சட்டவிரோத வெளிச்சம்

பாய்ச்சி மீன்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் கவனயீர்ப்பில் கலந்துகொண்டிருந்த மீனவர்களால் கருத்துத் தெரவிக்கப்பட்டது.

இது தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா - ரவிகரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்.

தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்களின் சில படகுகள் இன்றும் கடற்பரப்பில் காணப்பட்டன. கடற்படையினர் அவர்களைக் கைதுசெய்யவில்லை.

 எமது மீனவர்கள் அப் படகுகளை கரைக்குக் கொண்டுவரும் முனைப்பில் இருந்தார்கள். நேற்று முன்தினம் கரைக்குக் கொண்டுவந்த வெளிமாவட்ட படகினை காவற்றுறையினர் பொறுப்பேற்காமலும்,

அசட்டையாக இருந்த நிலையிலையையும் கவனத்தில்கொண்டு எமது மீனவர்களுக்கு அதனைத் தெளிவுபடுத்தி அதனைச் செய்யவில்லை என து.ரவிகரன்  தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.